சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் ‘1930’ என்ற புதிய எண்!

தமிழகத்தில் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கி வரும் ‘155260’ என்ற எண்ணிற்கு மாற்றாக ‘1930’ என்ற புதிய சைபர் க்ரைம் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து புகார் அளித்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு சைபர் க்ரைம் போலீசார் தொடர்பு கொண்டு மோசடி நடந்த வங்கி கணக்கை முடக்கி மோசடி நபர்கள் பணம் எடுக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.