இந்த ஆண்டு முதல் பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி அறிமுகமாகிறது. இந்த சேவைக்கு, அடையாளமாக சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டையை பயன்படுத்தி பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சபரிமலையில் சுலபமாக தரிசனம் செய்யலாம்.