சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உரிய அனுமதி சீட்டு இருந்தாலும் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
இத்தனையும் மீறி வருபவர்கள் திருமண மண்டபங்களில் தங்க வைத்து கொரோனா தடுப்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உங்கள் ஊர்களுக்கு செல்ல முடியும். பரிசோதனை முடிவுகள் தெரிய 2 அல்லது 3 நாட்கள் ஆகும். அதுவரை திருமண மண்டபங்களில் தான் தங்க வைக்கப்படுவார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அறிவிப்பு: உங்கள் பகுதிகளில் மே மாதம் 1ஆம் தேதிக்கு பின்னர் புதிய நபர்களோ அல்லது வெளியூரிலிருந்து வந்த பழைய நபர்களோ வந்திருந்தால் காவல் துறைக்கு 04175 222302 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். தகவல் தெரிவிக்கும் நபரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.