இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை இல்லை; வறண்ட வானிலையுடன் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவக்காற்று மிதமாக உள்ளது, எனவே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இன்று காலை வரை மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும். பின் 8:30 மணி முதல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.