வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020) மாலை 06:45 மணியளவில் தொடங்கி 31-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 08.49 மணியளவில் பவுர்ணமி நிறைவடைகிறது. போக்குவரத்து அனைத்தும் சீரானதால் வருகிற பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் என்று மக்கள் மிகவும் ஆர்வமாகவும், எதிர்பார்ப்பிலும் இருந்தனர்.
ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பவுர்ணமியன்று கிரிவலப் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.