திருவண்ணாமலை வருவாய் கோட்டம் சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனுப்பி வைப்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து, திருவண்ணாமலை வருவாய் கோட்டம் சார்பில், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரூ. 26.48 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் நேற்று (20.12.2023) வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. ஆர்.மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.