தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டிகள்!

தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டி

 

தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் தொடர்புமைய மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் பேச்சுப்போட்டி, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், திருக்குறள் வினாடி வினா போன்ற போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

பேச்சுப் போட்டிகள் பற்றிய விவரங்களை https://www.tamilvu.org என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள தொடர்பு மையங்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள தொடர்பு மையங்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டிகள் சான்றிதழ், மேற்சான்றிதழ், பட்டக் கல்விப் பயிலும் மாணவர்களுக்கென மூன்று பிரிவுகளில் நடத்தப்படும்.

போட்டிகளில் பங்கேற்போர் நுழைவு கட்டணம் கிடையாது.

த.இ.க.வின் இணையதளத்தில் பதிவு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள த.இ.க.வில் மாணவராகப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

மாணவர்கள் தங்களது பதிவுகளை தெளிவான காணொளியாக மூன்று ஐந்து நிமிடங்களில் மட்டுமே 15.12.2002 க்குள் இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.1000 என தேர்வு செய்யப்பட்டு முறையே பரிசுத்தொகையுடன் சிறப்பு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்ப்பு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தமிழ் மொழியில் மட்டுமே காணொளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். வினாடி வினா போட்டி இரு சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்று 10.12.2022 அன்று இணைய வழியில் நடத்தப்படும். முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே இறுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ள இயலும்.

போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் 31.12.2022 அன்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

போட்டி முடிவுகள் குறித்து தமிழ் இணைய கல்வி கழகத்தின் முடிவே இறுதியானது.

போட்டிகளுக்கான இணைப்பு: https://forms.gle/cLC6D1WFU1KWYM2n9

தொலைபேசி: +99 44-2220 9400 | +91 8667822210

மின்னஞ்சல்: tpktva@gmail.com