எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு!

தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும்.

8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும்.

15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

17ம் தேதி முதல் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.