திருவண்ணாமலையில் அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை 07.11.2022 பௌர்ணமியான இன்று அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதிகப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்படும் இடங்கள்:

  • திரௌபதி அம்மன் கோயில் அருகில்
  • செங்கம் சாலை சந்திப்பு அருகில் – பக்தர்கள் ஓய்வுக்கூடம்
  • ஆனாய்பிறந்தான் தூர்வாசல் கோயில் – அருகில் ஓய்வுக்கூடம்
  • ஆணாய்பிறந்தான் ஜோதி விநாயகர் கோயில் எதிரில் பக்தர்கள் ஓய்வுக்கூடம்
  • அத்தியந்தல் – திருநேர் அண்ணாமலை கோயில் அருகில் – பக்தர்கள் ஓய்வுக்கூடம்
  • அத்தியந்தல் – பழனியான்டவர் கோயில் அருகில் – பக்தர்கள் ஓய்வுக்கூடம்
  • அத்தியந்தல் – சீனிவாசா பள்ளி அருகில் உள்ள காலியிடம்
  • அடி அண்ணாமலை – அருணகிரிநாதர் திருக்கட்டளை அருகில் பக்தர்கள் ஓய்வுக்கூடம்
  • அடி அண்ணாமலை – கிராம சேவை மைய கட்டிடம் அருகில் பக்தர்கள் ஓய்வுக்கூடம்
  • காஞ்சி ரோடு சாலை சந்திப்பில் உள்ள பக்தர்கள் ஓய்வு கூடம்
  • கிராமிய காவல் நிலையம் அருகில் உள்ள காலியிடம்
  • பஞ்சமுக தரிசனம் அருகில் உள்ள காலி இடம்