திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ 2017, 2018, 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌, முன்னாள்‌ படை வீரர்கள்‌ தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவை 1.3.2022-க்குள்‌ புதுப்பித்துக்கொள்ளலாம்‌. முன்னாள்‌ படைவீரர்கள்‌ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ இயங்கி வரும்‌ முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தை அணுகி புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌, இந்தச்‌ சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்‌ என்று கலெக்டர் முருகேஷ்‌ வெளியிட்ட செய்திக்‌ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.