திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 17.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இதில் வாய் பேச இயலாத செவித்திறன் குறைபாடுள்ள செல்வி. காயத்ரி என்ற மாணவி அகில இந்திய ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் டெஃப் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், குண்டு எரியும் போட்டியில் தங்கமும், வட்டு மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் பதக்கம் மற்றும் சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்களிடம் காண்பித்து பாராட்டினை பெற்றார்.