திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பிளஸ்1 மாணவர்கள் செப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ்1 மாணவர்கள் ரூ.1,500 உதவித் தொகை பெற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு செப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திறனறித் தேர்வு அக்- 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.