பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம்!

பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம் (PM – KISSAN Samman Nidhi Yojana). இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000/- நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும். இதன் 11-வது தவணை இந்த மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை பெற ஒவ்வொரு PM – KISSAN பயனாளிகளும் https://pmkisan.gov.in என்ற இணையதளத்தில் E – KYC செயல்முறையை அப்டேட் செய்திருக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி 31.03.2022 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதற்கான காலக்கெடு 22.05.2022-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.