திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதியன்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 8 முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், நர்சிங் ,முதுநிலை மேலாண்மை போன்ற கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். 4 பாஸ்போர்ட் புகைப்படம், குடும்ப அட்டை ,ஜாதி சான்று, கல்வித்தகுதி சான்றிதழ் நகல் உடன் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை நேரத்திலும் அல்லது 04175-233381. என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.