திருவண்ணாமலை மாவட்டம் காவல் துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்!

திருவண்ணாமலை மாவட்டம் காவல் துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 12.12.2023 ஆம் தேதி காலை 10 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 100 பலதரப்பட்ட களங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவு 14(4) அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 12.12.2023 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள வைரஸ்களால் பரவும் நோய் இருப்பு பாதுகாப்பு மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றியும் கட்டயமாக முகக்கவசம் அணிந்து வந்து நுழைவு கட்டணமாக ரூ. 100/- ம் முன்பணமாக ரூ.2,000/-ம் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

10.12.2023 மற்றும் 11.12.2023 ம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வார ஏலத்தில் கலந்து கொள்ள ரசீது வழங்கப்படும்.

மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 18% (GST) சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து உடனே செலுத்த வேண்டும். இதற்கு உண்டான இரசீது வழங்கப்படும்.

பதிவு எண், எஞ்சின் எண், சேசிஸ் எண் இல்லத வாகானங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

மேலும், விவரங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம் அவர்களது அலுவலகத்தில் நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்

தொடர்புக்கு:
அலுவலக தொலைபேசி எண் – 04175233920