திருவண்ணாமலை தபால் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2023 – ஆம் ஆண்டின் 4 – ஆம் காலாண்டிற்கான பொதுமக்களின் அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட குறைதீர்க்கும் கூட்டம் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 16 – ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட ஏற்கனவே சமர்பித்து இருந்தும், தீர்வு எட் டப்படாத குறைகளை நேரடியாகவோ அல்லது வருகிற 14 – ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் மூலமாக எழுதி அனுப்பினால் கூட்டத்திற்கு முன்பாக ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக அளிக்கப்படும் புகார்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு. ஆர்.ரங்கராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.