திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தீபத் திருவிழா முன்னேற்பாடு  பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 14.11‌.2022 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி. கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. வீர்.பிரதாப் சிங், செய்யார் சார் ஆட்சியர் செல்வி. ஆர். அனாமிகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. ரஷ்‌மி ராணி, துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.