திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.6 உள்ளூர் விடுமுறை!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி காலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு 2500 பேர் மட்டும் அனுமதி.

  • மலையேறும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது  வாக்காளர் அட்டையின் நகலை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.
  • டிசம்பர் 6 தீப விழாவின் போது காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
    2500 பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதி அளிக்கப்படுவார்கள்.
  • பே கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலையேற அனுமதி மற்ற வழிகளில் ஏற கண்டிப்பாக அனுமதி இல்லை.
  •  கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை மலையில் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
  • அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே நெய் ஊற்ற வேண்டும்.
    வேறு எந்த இடத்திலும் நெய் தீபம் ஏற்றக்கூடாது.
  • பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி. காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது  திரும்ப கொண்டு வர வேண்டும்.
  • திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள்
    அறிக்கை வெளியீடு.