மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு!

டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது.

இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 17ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கும் என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.