தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி !

40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ப்ரீகேஜி – எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மற்றும் பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.