தமிழ்நாட்டில் 1 முதல் 12 வகுப்பு வரை ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகள் வரை ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், திருச்சியில் நிருபர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும். கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.