கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

அதன்படி,

  • ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும்,
  • ஜூன் 5ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும்
    பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.