வார இறுதி நாட்கள் ஆன பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
