திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் டிசம்பர் 10ஆம் தேதி கார்த்திகை தீபமும், டிசம்பர் 11ஆம் தேதி பௌர்ணமி கிரிவலமும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் டிசம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஏ.அன்பு ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சேலம்-திருவண்ணாமலை (வழி) அரூர், ஊத்தங்கரை, ஆத்தூர்-திருவண்ணாமலை (வழி) கள்ளக்குறிச்சி, நாமக்கல் – திருவண்ணாமலை (வழி) சேலம், அரூர், ஊத்தங்கரை, அரூர்-திருவண்ணாமலை (வழி) ஊத்தங்கரை, தருமபுரி – திருவண்ணாமலை (வழி) ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை (வழி) ஊத்தங்கரை, ஓசூர் – திருவண்ணாமலை (வழி) கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பாலக்கோடு – திருவண்ணாமலை (வழி) ஊத்தங்கரை, பெங்களூரு – திருவண்ணாமலை (வழி) ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் ஏ.அன்பு ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.