விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு சிறப்பு விரைவு ரயில்: ஜனவரி  6 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை, போளூர் வழியாக இயக்கப்படுகிறது

விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமார்க்கமாக, திருப்பதியில் இருந்து தினசரி நண்பகல் 12.35 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06853) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.