சென்னை – அயோத்தி இடையே விமான சேவையை இன்று தொடங்குகிறது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

இன்று முதல் 8 புதிய வழித்தடங்கள் வழியே அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னையில் பகல் 12:50 மணிக்கு புறப்பட்டு விமானம் மாலை 3:25 மணிக்கு அயோத்தி சென்று அடையும். அயோத்தியில் மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு மாலை 6:40க்கு சென்னை வந்து சேரும்.