அதில் முக்கிய அறிவுரையாக வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
*புதிய வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் வாக்காளர் அட்டை அல்லாதவர்கள் ஆதார் உட்பட 11 இதர அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.
*வாக்களிப்பதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்த வேண்டும்
*உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின் உங்களுக்கு அளிக்கப்படும் (வலது) கையுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
*வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செல்போன் கொண்டு செல்லலாம். மற்றபடி வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும் செல்போன் கொண்டு செல்ல கூடாது.
*முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப்பை காண்பிக்க வேண்டும். அதில் உள்ள பாக எண் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்பு , 17 A ரிஜிஸ்டரில் கையொப்பமிட வேண்டும். இதன் பின்னர் உங்களுடைய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும். பின்னர் உங்களுக்கு அளிக்கப்படும் Voters Slip ஐ பெற்று கொண்டு அதை 3ஆவது அமர்ந்திருக்கும் தேர்தல் அலுவலரிடம் காண்பித்து உங்கள் வாக்கை செலுத்தலாம்.
*நீங்கள் வாக்களிக்கும் வேட்பாளர் பட்டனை அழுத்தும் போது உங்களுக்கு பீப் என்ற சத்தமும், அதற்கு பக்கத்தில் சிகப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னமும் 7 வினாடிகள் தோன்றும். அப்போது நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
*வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வந்து நீங்கள் அணிந்துள்ள கையுறையை கழற்றி வெளியில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுவிடுங்கள்.