தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!

தமிழக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு. 2.19 கோடி குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.