2023-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு..!!

2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

  • கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும் என்றும்,
  • பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும்,
  • இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும்,
  • ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வுகள் 2024 மார்ச் மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2023-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு..!!