45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45 ஆவது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ஜனவரியில் 1000 அரங்குகள் வரை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளதாக பபாசி செயலாளர் கூறினார். அதே போல், கடந்த ஆண்டு போலவே கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணி முதல் 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் அளிக்கப்பட உள்ளதாகவும், குழந்தைகளுக்கு படிப்பு, எழுத்து சம்பந்தமாக அரங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.