திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.மற்றும் ஏந்துவாம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் பணிகளையும் மற்றும் ஏந்துவாம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டங்கள் கட்டப்பட்டு வருவதையும் மேலும், முக்குரும்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து பள்ளி கட்டடம் புணரமைக்கும் பணிகளையும் மற்றும் பையூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் போதிமரம் ஆதரவு ஏற்போர் முதியோர் இல்லத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கோவேந்தன் உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.