ஆவணி மாத பூஜைக்காக வரும் ஆகஸ்டு 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.