மருத்துவமனை வர இயலாதவர்களுக்கு வீட்டிலேயே இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை ஆட்சியர் கே எஸ் கந்தசாமி அறிமுகப்படுத்தியுள்ளார் இதனால் மகிழ்ச்சியடைந்த மாவட்ட மக்கள் இதுவரை யாருமே செய்திராத சாதனை எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தனர் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் உடல் பாதிப்புகளால் மருத்துவமனைக்குச் செல்ல இயலாதவர்களுக்கு வீட்டிலேயே சென்று இலவச மருத்துவ உதவி அளிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 89251 23450 என்ற கைப்பேசி எண் மூலமாக மருத்துவ அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
இந்த அமைப்பின் கீழ் மாவட்டத்தில் உள்ள 18 வட்டார மருத்துவமனைகளுக்கும் இந்த எண்ணை அழைத்து உதவி கூறும்போது தொடர்புடைய வட்டாரத்தில் பணிபுரியும் நோய்த் தடுப்பு சிகிச்சை பணியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளியின் வீட்டிற்குச் சென்று தேவைப்படும் மருத்துவ உதவி அளிப்பார் .
கை கால் செயல் இழந்தவர்களுக்கு கழுத்து முதுகு தண்டுவடம் காயம் உள்ளிட்ட மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள பல்வேறு நோய் உள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் கே எஸ் கந்தசாமி தெரிவித்துள்ளார்.