பொங்கல்  பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காகவோ அல்லது இதர அவசியத் தேவைகளுக்காகவோ வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றால், தயவுசெய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.

குறிப்பிட்ட பகுதியில் ரோந்து காவலர்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு குற்றங்கள் நடைபெறுவது முன்கூட்டியே தடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.