2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க 3-ம் பிரகாரத்தில் இருந்து 5-ம் பிரகாரத்திற்கு சாமி எழுந்தருளினார்.
தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், அன்னதான கூடம் அருகில் வைத்து சாமியின் சூலரூபமான அஸ்திரதேவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது. தொடர்ந்து பால், மஞ்சள், சந்தனம் போன்றவற்றின் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி பிரகார உலா வந்தார்.