திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 17 - ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 23-ந் தேதி தேரோட்டம் நடந்தது.

இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக கடந்த 26 - ஆம் தேதி மகாதீபம் திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், ஆந்திர, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்.

அதைத்தொடர்ந்து 27 - ஆம் தேதி அய்யங்குளத்தில் சந்திர சேகரர் தெப்பல் உற்சவம், 28 - ஆம் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், 29 - ஆம் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடந்தது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக நேற்று (30.11.2023) ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!
திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!