திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய, வரும் 24-ம் தேதி ஆன்லைனில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

ஆகவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளம் மூலம் மட்டுமே பக்தர்கள் தங்களது டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், போலி இணையங்களை நம்பிஏமாற வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.