திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்  ஆடி பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நாளை (ஆடி – 06) முதல் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் தொடக்கமாக நாளை காலை தங்க கொடிமரத்தில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்று விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும் அதனை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறும்.

மேலும், 23.07.2023 முதல் தினசரி காலை / மாலை இருவேளைகளிலும் அருள்மிகு பராசக்தியம்மன் திருவீதியுலா நடைபெறும்.