திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற மே 4,5 ஆகிய தேதிகளில் சித்ரா பௌர்ணமி வரவுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகைத் தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்பு. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் இன்று (22.04.2023) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.