திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (07.12.2024) இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.

















