ஏரி  குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம், சிட்டா நகல் விவரங்களை அளித்திட வேண்டும்.

விண்ணப்பம் அளித்த விவரங்களின் நில வகையினை கொண்டு வண்டல் மண் எடுக்க முன்னுரிமை வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.