திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (26.01.2024) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு பதக்கங்களும்,கேடையங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.