ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7. 19 மணிக்குத் தொடங்கி 22ம் தேதி மாலை 6.17 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம். கொரோனா பரவாமல் தடுக்க, மக்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.