திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பு!

கார்த்திகை தீப விழாவுக்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 15 பஸ் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்க 22 தனியார் பஸ்கள், 172 பள்ளி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 கட்டணத்தில் 36 சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.