திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.















