TET – ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2க்கான தேர்வு தேதி அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2க்கான தேர்வு ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த கணினி வழித் தேர்வுக்காக பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியை மேற்கொள்ள தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் 3வது வாரத்தில் அறிவிக்கப்படும்.