கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ஜன.12(இன்று) முதல் ஜன.27ம் தேதி வரை http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50ஐ சேர்த்து தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜன.27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

-அரசு தேர்வுகள் இயக்குநர்