இன்று தேசிய கைத்தறி தினம்!

கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடுவது என 2015-ல் மத்திய அரசு முடிவு செய்தது.

தேசிய கைத்தறி தினம் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.