இன்று திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள்!

நமது திருவண்ணாமலை மாவட்டத்தின் 34 வது பிறந்த நாள். 1989 ஆம் ஆண்டு இதே நாளில் வட ஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிந்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் திருவண்ணாமலை சம்புவராயர் என புதிய மாவட்டம் உருவானது. இம்மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக திரு. கோலப்பன் பணியேற்றார். பின்னர் சம்புவராயர் என்ற பெயர் நீக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் என பெயரிடப்பட்டது.