திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் இன்று (07.06.2022) நடைபெற்ற 1431-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நில அளவை) திரு. சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (பொது) திரு. ரவி, திருவண்ணாமலை வட்டாட்சியர் திரு. சுரேஷ் துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. விஜயலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.